புனேவில் அரைகுறை ஆடையில் ஆண்களுடன் ஊர் சுற்றியதாகக் கூறி இளம்பெண் மீது தாக்குதல்
புனே: புனேவில் அரைகுறை ஆடை அணிந்து இரவு நேரத்தில் ஆண்களுடன் ஊர் சுற்றியதற்காக இளம்பெண் ஒருவரை சிலர் தாக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 22 வயது பெண் தனது தோழியின் திருமணத்தையொட்டி நடந்த சங்கீத நிகழ்ச்சி ஒத்திகையில் கலந்துவிட்டு கடந்த 1ம் தேதி காலை 5.30 மணிக்கு இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர்களின் காரை வழிமறித்த சிலர் அந்த பெண்ணை பார்த்து இப்படி அரைகுறை ஆடை அணிந்து கண்டநேரத்தில் ஆண்களுடன் ஊர் சுற்றுகிறாயே என்று கூறி திட்டியுள்ளனர். மேலும் அந்த பெண்ணை காரில் இருந்து கீழே இழுத்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில்,
எங்கள் காருக்கு அருகில் வந்த ஒரு காரில் இருந்த நபர்களில் ஒருவர் என்னை பார்த்து திட்டினார். பின்னர் எங்கள் காரை வழிமறித்து என்னை தாக்கினர். இதை தடுக்க வந்த என் நண்பரையும் தாக்கினர். அங்கிருந்து சென்ற அவர்கள் சிறிது நேரத்தில் 10, 15 பேருடன் வந்து என்னை மிரட்டினர்.
அரைகுறை ஆடை அணிந்து ஆண்களுடன் ஊர் சுற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். நான் போலீசாருக்கு போன் செய்தேன். அவர்கள் ஒரு மணிநேரம் கழித்து வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கூறி நான் காவல் நிலையத்திற்கு ஒரு வாரமாக நடையாய் நடந்தேன். அதன் பிறகே வழக்குப்பதிவு செய்தனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications