பெயர் குழப்பத்தால் அப்பாவி வாலிபர் குத்திக்கொலை! பழிவாங்க வந்த கும்பல் வெறிச்செயல்!!
டெல்லி: பெயர் குழப்பம் காரணமாக, பழிவாங்க வந்த கொலையாளிகள் அப்பாவி வாலிபரை குத்தி கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி, வாசிர்பூர் மார்க்கெட் பகுதியில் கடந்த வாரம் சஞ்சீவ் ரானா என்ற வாலிபர் நான்குபேர் கும்பலால் கொல்லப்பட்டார். இந்த கொலையில் கொலு என்ற வாலிபருக்கு தொடர்பு உள்ளது.

பழிவாங்க தேடுதல்
கொலை செய்யப்பட்ட நபரின் உறவுக்காரர்கள், கொலையாளி கொலுவை பழிவாங்க தேடிக்கொண்டிருந்தனர்.

மார்க்கெட் வருவதாக தகவல்
இந்நிலையில், அதே மார்க்கெட் பகுதிக்கு கொலு நேற்று வருவதாக தகவல் கிடைத்தது. கொலையாளியை நேரில் பார்க்காத மூன்றுபேர் மட்டும், மார்க்கெட்டுக்கு தேடி போயுள்ளனர். அடையாளங்களை வைத்து 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை சுற்றி வளைத்தனர்.

பெயரை சொன்னதும் குத்து
அவரிடம் உனது பெயர் என்ன என்று கேட்டுள்ளனர். அவரும் கொலு என்று பதில் அளித்துள்ளார். உடனடியாக சுற்றிவளைத்த மூன்றுபேரும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் கொலு அதே இடத்தில் உயிரிழந்தார்.

விசாரணையில் அம்பலம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சய் என்ற 19 வயது வாலிபரையும், மேலும் இரு மைனர், கொலைகாரர்களையும் கைது செய்தனர். சஞ்சீவ் ரானா உறவுக்காரர்களான இவர்கள், பழிக்கு பழியாக கொலை செய்ததாக தெரிவித்தனர். விசாரணையில்தான், அவர்கள் கொல்ல வந்த கொலு இவர் கிடையாது, கொலையானது அப்பாவி என்று தெரியவந்தது.

பெயர் வச்சது குற்றமா?
டெல்லிவாலாக்களில் பலரது பெயர் கொலு என்று இருக்கும். ஆனால் அப்பாவி ஒருவரின் உயிர் அந்த பெயரால் பறிபோனது வேதனைக்குறியதே.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications