ம.பி.: உறவுக்கார சிறுமியை சீரழித்து, கர்ப்பமாக்கி, கருவையும் கலைத்த வாலிபர்
போபால்: மத்திய பிரதேசத்தில் 23 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவர் கர்ப்பமானதும் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிபு பிரஜபதி(23). அவரது தனது உறவுக்கார 16 வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். இருப்பினும் ஷிபு அவரை கண்டுகொள்ளவில்லை. இந்த சூழலில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவர் தனக்கு வயிறு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயாரோ அவரை ஜைத்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஷிபுவிடம் தெரிவித்துள்ளார்.
ஷிபுவோ சிறுமியை கடந்த 9ம் தேதி சத்னா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் சிறுமி நடந்த விவரங்களை எல்லாம் தனது தாயிடம் தெரிவித்தார். உடனே அவர் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷிபுவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications