சென்னையிலிருந்து காட்பாடி வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ்! ரயிலில் ஏறாமல் நள்ளிரவில் அலறி ஓடிய பயணிகள்
காட்பாடி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வந்த நிலையில் அங்கு காத்திருந்த பயணிகள் அதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. இரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் சடலம் சிக்கியிருந்தது. இதை கண்ட ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரயிலில் ஏறாமல் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு கீழே இறங்கிய ரயில் என்ஜின் டிரைவர் ரயிலில் இளைஞரின் சடலம் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் என்ஜினில் சிக்கியிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர்.
அப்போது இளைஞர் உடலில் இரு கால்களும் துண்டாகி இருந்தது. மேலும் ரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்புகளும் தலையின் பின் பகுதி கடுமையாக சிதைந்து இருந்ததும் தெரியவந்தது. துண்டான கால்கள் எங்கு கிடக்கிறது என்பது குறித்து போலீஸார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இறந்த வாலிபர் யார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா , இல்லை ரயிலில் மோதி இறந்தாரா, யாராவது கொன்று இளைஞரின் சடலத்தை கொண்டு வந்து போட்டனரா, அந்த சடலம் எங்கிருந்து அடித்துக் கொண்டு வரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications