போலீசார் அத்துமீறல்.. பெண் போலீசார் என் விரலை உடைக்க முயன்றனர்.. ஒய்.எஸ்.ஷர்மிளா பரபர குற்றச்சாட்டு!
ஹைதராபாத் : "பெண் என்றும் பாராமல் ஆண் போலீசார் என்னை தள்ளிவிட்டு அத்துமீறி நடந்துகொண்டனர். 2 பெண் போலீசார் என் விரலை உடைக்க முயற்சித்தனர். நான் என்னை தற்காத்துக் கொள்ளவே போலீசாரை தள்ளிவிட்டேன்." எனத் தெரிவித்துள்ளார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித்தலைவரும், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, தெலுங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TSPSC) நடத்தவிருந்த போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்திற்குச் செல்ல முயன்றார்.

அப்போது அவரை போலீசார் தடுத்த நிலையில், ஒய்.எஸ்.ஷர்மிளா போலீசாரை தாக்கியதாக நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று நாம்பல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நேற்று மாலை ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஒய்.எஸ்.ஷர்மிளா, சந்திரசேகர ராவ் 9 வருடங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்? வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மகளிருக்கு இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு 2 படுக்கை அறை கொண்ட வீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது? இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் அவர்களை அடக்கி சிறையில் அடைக்கும் வேலையைத்தான் அவர் செய்து வருகிறார்.
தெலுங்கானா அரசுப் பணியாளர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து, அதனை விசாரிக்கும் சிறப்பு குழுவுக்கு மனு கொடுக்க நான் மட்டும் தனியாக சென்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்காததுடன், பெண் என்றும் பாராமல் ஆண் போலீசார் என்னை தள்ளிவிட்டு அத்துமீறி நடந்துகொண்டனர். 2 பெண் போலீஸார் என் விரலை உடைக்க முயற்சித்தனர்.

நான் என்னைப் பாதுகாத்து கொள்ளவே போலீசாரை தள்ளிவிட்டேன். ஆனால் நான் அவர்களை அடித்தது போல் சமூக வலைதளங்களில் போலீசாரே சில போலி வீடியோக்களை வெளியிட்டு, என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்" எனக் குற்றம்சாட்டியுள்ளார். பெண் போலீஸ் ஒருவரின் கன்னத்தில் அறைவது போல வீடியோ வெளியான நிலையில், போலீசார் போலி வீடியோவை வெளியிட்டதாக ஷர்மிளா குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ்












Click it and Unblock the Notifications