ஆந்திரா அதகளம்.. அண்ணன் ஜெகனை எதிர்க்க மாநில காங்கிரஸ் தலைவராக தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்!

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தும் உள்ளார். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் இடையேதான் போட்டி உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், ஜனசேனா ஆகியவையும் களத்தில் உள்ளன.

YS Sharmila likely to appoint Andhra Congress chief?

ஆந்திராவில் காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாத நிலைமையில்தான் உள்ளது. ஆந்திராவில் காங்கிரஸுக்கு உயிர் கொடுக்கும் வகையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார்.

இந்த நிலையில் ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படக் கூடும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அரசியல் களத்தில் மோதுகிறார். இன்னும் சில மாதங்களில் ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் வியூகங்கள் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

'தாய்மாமனா' நின்னு கல்யாணத்தை நடத்தி வையுங்க- டெல்லி போகும் முன் 'ஜெகன்' அண்ணாவிடம் உருகிய ஷர்மிளா!
தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் இருந்தது. தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிரடி வியூகங்களால் ஆட்சியையே கைப்பற்றியது. ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்ற போதும் இருப்பை வெளிப்படுத்த ஒய்.எஸ்.ஷர்மிளாவின் நியமனம் உதவும் என்பது டெல்லி மேலிடத்தின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+