'தாய்மாமனா' நின்னு கல்யாணத்தை நடத்தி வையுங்க- டெல்லி போகும் முன் 'ஜெகன்' அண்ணாவிடம் உருகிய ஷர்மிளா!
விசாகப்பட்டினம்: டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா. டெல்லி செல்வதற்கு முன்னதாக நேற்று ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா.
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, சட்டசபை தேர்தல்- லோக்சபா தேர்தலை ஒருசேர எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு எதிர்கட்சியாக களத்தில் இருப்பது தெலுங்குதேசம்தான். பாஜகவும் காங்கிரஸும் ஆந்திராவில் களத்திலே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இந்த நிலையில் ஆந்திராவில் காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா களமிறக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரஸில் இணைந்தார் ஷர்மிளா. அவரது ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்துவிட்டது. ஆந்திராவில் அண்ணன் ஜெகனை எதிர்த்து தங்கை ஷர்மிளா அரசியலில் மோதுகிறார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது.
இதனிடையே டெல்லி செல்வதற்கு முன்பாக அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியை நேற்று சந்தித்து பேசினார் ஷர்மிளா. தடேபள்ளியில் உள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஷர்மிளா, அவரது கணவர் அனில் குமார், மகன் ராஜா ரெட்டி ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். ஜெகன் மோகன் ரெட்டியை மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் நேற்றுதான் நேரில் சந்தித்தார் ஷர்மிளா.

இந்த சந்திப்பின் போது ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி பாரதி ஆகியோருக்கு மகன் ராஜா ரெட்டியின் திருமண அழைபிதழை கொடுத்தனர் ஷர்மிளா குடும்பத்தினர். ராஜா ரெட்டியின் தாய்மாமா என்பதால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முறைப்படி குடும்பத்துடன் வந்து அழைப்பிதழ் தந்தார் ஷர்மிளா. ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் அரை மணிநேரம் இருந்துவிட்டு குடும்பத்துடன் கிளம்பியினார் ஷர்மிளா. அவரது மகன் ராஜா ரெட்டியின் திருமணம் ஹைதராபாத்தில் பிப்ரவரி 17-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, என் மகன் ராஜா ரெட்டி திருமணத்துக்கு என் அண்ணனை அழைக்க வந்தேன். இதைத் தாண்டி வேறு எந்த முக்கியத்துவம் இந்த சந்திப்பில் இல்லை என்றார்.
'தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது'!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications