ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் அநியாயம்.. காண்டம்களில் சின்னம் பொறித்து விநியோகம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சி ஆகியவை சார்பில் அவர்களுடைய கட்சி சின்னங்கள் பொறித்த ஆணுறைகள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. அது போல் ஆந்திரா, அருணாச்சல், ஒடிஸா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடைபெறுகின்றன.

ஆந்திராவை பொருத்தமட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அது போல் தெலுங்கு தேசம் கட்சியும் தற்போது ஆட்சிக்கு வர போராடி வருகிறது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அவர் எப்படியாவது இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முயற்சிக்கிறார். இதனால் இரு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு தங்களை பற்றி விமர்சனங்களை முன் வைத்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பிரச்சாரத்திலும் புதுமைகளை புகுத்துவதாக எண்ணி அபத்தமானதை செய்கின்றன. அந்த வகையில் இரு கட்சிகளும் காண்டம் எனப்படும் கருத்தடை சாதனத்தில் தங்கள் கட்சியின் சின்னங்களை பதிக்கிறார்கள. அதை வாக்காளர்களுக்கும் விநயோகம் செய்கிறார்கள்.
இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications