இந்தியாவின் அதிரடி.. படுபாதக பயங்கரவாதி மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி.. பரபரப்பு தகவல்
இஸ்லாமாபாத்: நள்ளிரவில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் திறமையைக் காட்டுவதாக இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த காலங்களில் நடந்த பல படுபயங்கரத் தீவிரவாதத் தாக்குதலுக்கு மசூத் அசார் மூளையாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா பதிலடி தர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்திய ராணுவம்
இந்தச் சூழலில் நள்ளிரவில் இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. சத்தமே இல்லாமல் வெறும் 25 நிமிடங்களில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சரியாகத் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டன. அதிகாலை 1.05 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மசூத் அசார்
இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த ராணுவம் ஆய்வு செய்து வருகிறது. அதேநேரம் 75-80 தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாரெல்லாம் உயிரிழப்பு
அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசாரின் நெருங்கிய உதவியாளர்களும் அவர்களின் தாயும் இதில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் நடந்த பல படுபயங்கரத் தீவிரவாதத் தாக்குதலுக்கு மசூத் அசார் மூளையாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது குடும்பத்தினர்களிலும் பலர் தீவிரவாதிகளாகவே செயல்பட்டு வந்ததாகத் தகவல் உள்ளது.
பஹாவல்பூர்
பஹாவல்பூர் பாகிஸ்தானின் 12வது பெரிய நகரமாகும்.. இது லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சுப்ஹான் அல்லா முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த இடத்தில் தான் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் அதிகம் இருந்தனர். அவர்களைக் காலி செய்யும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாதவாறு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள அப்பாவி பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகிறது. அதில் சுமார் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
-
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications