யு.கே.: 10 வயது பாகிஸ்தானி சிறுமியை 10 ஆண்டுகளாக அடிமையாக வைத்து பலாத்காரம்
லண்டன்: காது கேளாத 10 வயது பாகிஸ்தானிய சிறுமி இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டு அங்கு ஒருவரின் வீட்டில் 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த காது கேளாத பெண் அவருக்கு 10 வயது இருக்கையில் இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்தில் உள்ள இல்யாஸ் அஷார்(85), தாலாத்(69) தம்பதி வீட்டில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டுள்ளார்.
அவரை தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வைத்துள்ளனர்.
மேலும் இல்யாஸ் அந்த பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காது கேளாத அவருக்கு எழுத, படிக்கத் தெரியவில்லை. ஆனால் அவரது பெயரை மட்டும் எழுத அஷார் குடும்பத்தார் கற்றுக் கொடுத்துள்ளனர். அதுவும் அவரை கையெழுத்து போட வைத்து சில நன்மைகளை தாங்க பெறவே பெயர் எழுத கற்றுக் கொடுத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு இல்யாஸ் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். இளம்பெண்ணை கடத்தி வந்து அடிமையாக வைத்து பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இல்யாஸுக்கு 15 ஆண்டுகள் சிறையும், அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 98 லட்சத்து 41 ஆயிரத்து 536 நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications