Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் கொரியாவில் அடுத்தடுத்து நடந்த ‘ட்விஸ்ட்’.. பதற வைத்த அந்த 12 மணி நேரம்! அதிபர் யூனுக்கு தலைவலி!

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல், திடீரென அவசரநிலை பிரகடனம் செய்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக வாக்களித்த நிலையில், எமர்ஜென்சி சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஓவர் நைட்டில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளது தென் கொரியா. 12 மணி நேரத்தில் தென்கொரியாவில் என்னவெல்லாம் நடந்தது?

தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார் அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல். விரைவில் தென் கொரியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு நாடாளுமன்றம் முடங்கியது.

south korea emergency world


வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல் தென் கொரியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும், இவற்றை ஒடுக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாகவும் அதிபர் யூன் சுக் யோல் அறிவித்தார். ஆனால் தென் கொரியா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 190 உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் எமர்ஜென்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தென் கொரிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு எதிர்ப்புகள் வலுவடைந்து கொண்டே சென்ற நிலையில் தென் கொரியா அதிபர் யூன், 6 மணி நேரத்தில் தனது எமர்ஜென்சி உத்தரவை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் அதிபர் யூன் யோல் நடவடிக்கையை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் புதிய பிரச்சனையை கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன அதிபர் பதவி விலகும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தென் கொரிய அதிபர் யூன் எமர்ஜென்சியை அறிவித்தது அவருக்கே பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

1. எமர்ஜென்சி சட்ட விதிகளின் கீழ், அரசியல் மற்றும் நாளுமன்ற நடவடிக்கைகள் சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும், வாரண்ட்கள் இல்லாமல் கைது செய்யப்படலாம். எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக கண்டித்து, மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. பலர் இந்த நடவடிக்கையை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மீதான தாக்குதல் என்று குற்றம்சாட்டினர்.

2. இரவு நேரத்தில், அதிபர் யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்த சிறிது நேரத்தில், சியோலில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பாதுகாப்புப் படைகள் சீல் வைத்தன. ஹெலிகாப்டர்கள் கூரையில் தரையிறங்கின. ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் வழியாக ராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.

3. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தென் கொரிய அதிபரின் அறிவிப்பு வெளியான உடனேயே சியோலில் உள்ள பாராளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். எமர்ஜென்சி இராணுவச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், யூன் சுக் இயோலை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

4. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் திரட்டி, அதிபர் யூன் அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசியல் சதித்திட்டத்தை ஏற்பாடு செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

5. இரவில் நடந்த அவசர வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் எமர்ஜென்சி அறிவிப்பை நிராகரித்து ஒருமனதாக வாக்களித்தனர். மொத்தமுள்ள 300 எம்.பிக்களில் 190 பேர் எமர்ஜென்சிக்கு எதிராக வாக்களித்தனர். வாக்கெடுப்புக்குப் பிறகு, பாராளுமன்ற சபாநாயகர் இராணுவச் சட்டம் செல்லாது என்று அறிவித்தார்.

6. மாலையில் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன. தென் கொரிய சட்டத்தின்படி, பாராளுமன்றம் பெரும்பான்மை வாக்குகளால் இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரினால் ஜனாதிபதி உடனடியாக நீக்க வேண்டும். ஜனாதிபதி யூனின் சொந்தக் கட்சியே, அவரது உத்தரவை நீக்கக் கோரியது.

7. எமர்ஜென்சி அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி யூன் அறிவித்ததை அடுத்து, எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டாடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "நாம் வென்றுவிட்டோம்" என்று கோஷமிட்டு, கைதட்டி கொண்டாடினர்.

8. ஜனாதிபதி யூன் இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்திய பின்னர் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அமெரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் கர்ட் காம்ப்பெல் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அரசியல் தகராறுகளை அமைதியான முறையில் தீர்த்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

9. தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இராணுவச் சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, செவ்வாயன்று அமெரிக்க டாலருக்கு எதிராக கொரிய வோன் மதிப்பு வீழ்ச்சியைக் கண்டது. தென் கொரிய பங்குகள் 2% சரிவைக் கண்டுள்ளன.

10. தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி, அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது. நாட்டின் முக்கிய தொழிற்சங்கக் குழு, அதிபர் யூன் ராஜினாமா செய்யும் வரை காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+