நடுங்கிடுச்சே.. சுற்றிலும் ஆண்கள் நிற்க.. மைதானத்தின் நடுவே பெண்களை நிற்க வைத்து.. தாலிபன்கள் பகீர்

ஆப்கன் பெண்கள் 3 பேர் உட்பட 12 பேருக்கு கசையடி தண்டனை தரப்பட்டது

Subscribe to Oneindia Tamil

ஆப்கன்: இன்னொரு கொடுமை ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.. தாலிபன்களின் அட்டகாசத்தை பார்த்து உலக மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. எதிர்பார்த்தபடியே பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்..

பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஒரு வருடத்துக்கும் மேலாகவே ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

டீச்சர்கள்

டீச்சர்கள்

கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது. இப்படி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.. திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் தாலிபன்கள் உத்தரவிட்டனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது..

 பட்டதாரிகள்

பட்டதாரிகள்

பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். இதனிடையே, இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர். அந்தவகையில், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு நடந்துள்ளது.. அங்குள்ள லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகரில், பெண்களுக்கு தண்டனை தந்துள்ளனர்.. ஒரு பெரிய மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் கூடிநிற்க, அவர்கள் முன்னிலையில் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்துள்ளனர்..

 3 + 9 கிரிமினல்

3 + 9 கிரிமினல்

இந்த 12 பேரும், திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக, கோர்ட்டில் நிரூபணமானவர்கள்.. அதனால், தண்டனையை தாலிபன்களே நிறைவேற்றி உள்ளனர். பரந்து விரிந்த அந்த மைதானத்திற்கு, 12 குற்றவாளிகளும் அழைத்து வரப்பட்டனர்... நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கு குவிந்திருந்தனர்.. குற்றஞ்சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரும் மைதானத்தின் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டனர். அங்கு குற்றத்தின் அடிப்படையில் 12 பேருக்கும் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர்.

 மைதானம்

மைதானம்

இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமல்படுத்தி கடுமையான தண்டனைகள் விதித்து வருகின்றனர் வரும் நிலையில், இந்த தண்டனையும் தற்போது அரங்கேறி உள்ளது. இவர்களுக்கு தண்டனை தருவதை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, ட்விட்டர், பேஸ்புக்குகளில் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.. முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் இந்த அறிவிப்பினை விடுத்திருந்தது.. அனைவரும் திரண்டு மைதானத்துக்கு வந்து, தண்டனையை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால், ஏராளமான ஆண்கள் இதற்காகவே கிளம்பி மைதானத்துக்கு வந்துள்ளனர்..

 கோல்டன் பீரியட்ஸ்

கோல்டன் பீரியட்ஸ்

கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், லேசாக தலைநிமிர தொடங்கினர்.. வீட்டை விட்டு வெளியேறி மெல்ல மெல்ல பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.. வேலைக்கும் செல்ல துவங்கினர்.. ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.. ஆனால் அதற்குள் இந்த தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. எங்கே போவது, என்ன செய்வது என்றே தெரியாமல் ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+