ஏமன் நாட்டு சர்வதேச எல்லையில் 13 குமரி மாவட்ட மீனவர்கள் கடலில் தவிப்பு - மீட்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சனா: ஏமன் நாட்டு சர்வதேச எல்லையில் குமரி மாவட்ட மீனவர்கள் 13 பேர் கடலில் தத்தளித்து வருகின்றனர். செப்டம்பர் 12 இல் கொச்சியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க குமரி மாவட்டம் மீனவர்கள் சென்றனர்.
அங்கு ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் சென்ற படகு பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து நடுக்கடலில் 13 மீனவர் தத்தளிப்பதாக ஏமன் நாட்டு அதிகாரிகள் இந்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஏமன் நாட்டில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதையடுத்து எல்லையில் தத்தளிக்கும் மீனவரை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மீனவர்களை மீட்டு வரும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications