அடுத்தடுத்து 5 முறை குலுங்கிய ஆப்கானிஸ்தான்.. நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல ஹெராட்டின் வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அதைத் தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 120 பேர் பலியாகியிருக்கலாம் என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு அப்கானிஸ்தானில் தென்கிழக்கு பகுதியில் இதேபோன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரின் மனிதிலும் இந்த 2022 நிலநடுக்கம் குறித்த அதிர்வு நீங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications