சோமாலியா: காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 19 பேர் பலி
மொகடிஷு: சோமாலியாவில் காவல் நிலையத்தில் புகுந்து போராளிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.
எத்தியோப்பியாவின் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது சோமாலியா நாட்டின் பெலேட்வேயின் நகரம். இந்நகரம் சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவுடன் இணையும் பிரதான சாலையிலும், அந்நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையிலும் இருப்பதால் தனி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறாது.
நேற்று அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் புகுந்த போராளிகள், அங்கு பணியில் இருந்த காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்ற இத்தாக்குதலில் சிக்கி 19 பேர் கொல்லப் பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில், அங்கிருந்த ஜிபோட்டியன் துருப்புகளின் கமாண்டரான கர்னல் ஒஸ்மான் டுபாட், அரசுத் துருப்புகள் தற்கொலைப் படை வீரர்கள் இருவர் உட்பட போராளிகளில் 10 பேர் உள்ளடங்குவர்.
அதேபோல், காரில் வந்த மற்றொரு தற்கொலைப் படைத் தீவிரவாதி காவல்நிலையத்தின் வாயிலில் அதை மோதி வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் ஐந்து வீரர்களும், நான்கு பொதுமக்களும் இறந்துள்ளதாக கர்னல் இஸ்மாயில் அலி தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு, அல்கொய்தாவினருடன் இணைந்த அல்-சஹாப் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த மாதம் பிரபல ஓட்டல் ஒன்றில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியாவை ஆக்கிரமித்திருந்த அல்சஹாப் தீவிரவாதிகள் நேட்டோ படையினர் உதவியுடன் விரட்டப்பட்டிருந்த போதிலும் அவர்களின் ஆதிக்கம் இன்னும் அந்நாட்டின் தென்பகுதிகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது என இத்தாக்குதல்கள் குறித்து சந்தேகம் நிலவுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications