நர வேட்டையாடும் இஸ்ரேல்.. பாலஸ்தீன் அகதிகள் முகாம் தாக்குதலில் 200ஐ நெருங்கும் பலி! தொடரும் போர்
ஜெருசலேம்: பாலஸ்தீனில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி இருக்கிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்கவும், பல ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், இஸ்ரேல் அல் அக்சா மசூதியின் புனிதத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறி ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் காரணமாக நிலைகுலைந்த இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்தது. காசா மீது அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட பல 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். தங்கள் நாட்டு பிணையக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. அதில் 40 குழந்தைகள் தலை துண்டிக்கப்பட்டதாக பகீர் கிளப்பியது இஸ்ரேல். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும் இதை கூறிய நிலையில் அது தவறான குற்றச்சாட்டு என்பது உறுதியானது.
மாறாக இஸ்ரேல் பிணைக் கைதிகளை அடுத்தடுத்து ஹமாஸ் விடுதலை செய்து வருகிறது. மறுபக்கம் காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜோர்டான் நாடு கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பொது சபையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தது.
அதில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக 120 நாடுகள், எதிராக 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. மறுபக்கம் பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் கொடூர தரை வழித்தாக்குதலையும், வான் வழித் தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் காசாவில் உயிர் பலிகள் பல ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே போர் தாக்குதல்களால் வீடுகளை இழந்து உயிர் பிழைக்க காசாவில் உள்ள ஜபலியா என்ற அகதிகள் முகாமில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கி உள்ளார்கள்.
இந்த நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 200 ஐ நெருங்கி உள்ளது. ஏராளமானோர் இந்த தாக்குதலில் காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். இடிபாடுகளில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications