அமெரிக்காவில் எதிர்பாராவிதமாக தாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை
ஹேடன்: அமெரிக்காவில் 29 வயது பெண் தனது 2 வயது மகனால் எதிர்பாராவிதமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள பிளாக்புட் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா ரட்லஜ்(29). அவர் தனது குடும்பத்தாருடன் ஹேடன் பகுதியில் வசிக்கும் உறவினர்களின் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அவர் தனது 2 வயது மகன் உள்பட 4 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள வால்மார்ட் கடைக்கு சென்றார்.

கடையில் அவர் 2 வயது குழந்தையை பொருட்கள் வைக்கும் ட்ராலியில் அமரவைத்து அதில் தனது கைப்பையையும் வைத்துள்ளார். அப்போது குழந்தை வெரோனிகாவின் கைப்பையை எடுத்து திறந்தது. கைப்பையில் வெரோனிகா வைத்திருந்த சிறிய துப்பாக்கியை கையில் எடுத்த குழந்தை தனது தாயை நோக்கி சுட்டது. இதில் குண்டு பாய்ந்த வெரோனிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த அவரின் கணவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இதற்கிடையே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெரோனிகாவின் உடலை கைப்பற்றினர். மேலும் குழந்தைகளை உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வால்மார்ட் கடை நாள் முழுவதும் மூடப்பட்டது. வெரோனிகா வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications