நியூயார்க் மாகாணத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் மோதி பயங்கர விபத்து.. 20 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வாகனமும் மற்றொரு வாகனமும் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
நியூயார்க் மாகாணத்தின் ஸ்கொஹரியே என்ற நகரத்தில் இந்த விபத்து அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது.

இந்தக் குட்டி நகரம் அல்பானி பகுதியிலிருந்து சுமார் 43 மைல் மேற்கு திசையில் அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஆப்பிள் பேரல் என்ற கஃபே அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
மிகப் பெரிய சத்தத்தை கேட்ட தாகவும் இதைத் தொடர்ந்து மக்கள் அலறி துடிக்கும் வேதனைக் குரல்கள் ஆங்காங்கே எதிரொலித்த தாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
[1624 பேர் மரணம்.. ஒரு கிராமத்தையே மயானமாக்க திட்டம்.. இந்தோனேசியா சோகம்!]
திருமண கோஷ்டியினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும் நியூயார்க் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பிரஸ்மீட் ஒன்றுக்கு அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் முழு விவரங்களும் தெரியப்படுத்தப்படும்.
20 killed in New York state car crash after wedding limo slams into pedestrianshttps://t.co/saElLoCoIr
— TheJournal.ie (@thejournal_ie) October 7, 2018
திருமண கோஷ்டியினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப் பகுதியில் நடந்து சென்றோரும் கூட இதில் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications