நாய் கூண்டில் 20 சிறுமிகள்... மொத்தம் 700 ஆண்களால் பாதிப்பு! பிரிட்டனை உலுக்கிய பெண்ணின் வாக்குமூலம்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்துள்ள செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது, ரத்தம் உறைகிறது. பல ஆண்டுகளாக அரங்கேறி வரும் ஒரு பயங்கரமான பாலியல் வேட்டை, இப்போது ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது. சிறுமிகளை குறிவைத்து கடத்தி, கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த ஒரு பாலியல் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள், பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே வெடித்துக் கிளம்பியுள்ளன. அப்படி என்னதான் நடந்தது?
இங்கிலாந்தை ஒரு பாலியல் கும்பல் வலம் வந்து கொண்டுள்ளது.. 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரமாக இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

இங்கிலாந்து பாலியல் சம்பவம்
12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட பிஞ்சு சிறுமிகளை தான் இந்தக் கும்பல் குறிவைத்துள்ளது. கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, சித்திரவதை என அந்தப் பிஞ்சுகளின் வாழ்க்கையே நரகமாக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், அந்த கொடுமையிலிருந்து எப்படியோ உயிர் பிழைத்து ஓடிவந்துள்ளார்.. அந்த சிறுமி அளித்த வாக்குமூலம் நாடாளுமன்றத்தையே உறைய வைத்துள்ளது.
"எனக்கு 13 வயது இருக்கும்போது இந்தக் கும்பலிடம் சிக்கினேன். அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 முதல் 700 ஆண்களால் நான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்" என்று அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார். இன்னொரு பெண்ணோ, "விலங்குகளை அடைப்பது போல, நாய் கூண்டுகளுக்குள் 15 முதல் 20 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றம்
இந்த சிறுமிகளின் வாக்குமூலம் ஒட்டுமொத்த நாட்டையுமே அதிர வைத்தது.. இதையடுத்து அரசு விசாரணையை மேற்கொண்டது.. அப்போது இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, கார் டிரைவர்கள், லோக்கல் மார்க்கெட்டுகளில் வியாபாரம் செய்யும் நபர்கள் தான் இந்த நெட்வொர்க்கில் முக்கியப் புள்ளிகளாக இருக்கிறார்களாம்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களின் தேர்வில் இனம் மற்றும் மதம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தக் கும்பல் திட்டமிட்டே, பிரிட்டனின் வெள்ளையின மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை மட்டுமே குறிவைத்து இந்த வன்கொடுமைகளை நிகழ்த்தியிருப்பதும அம்பலமாகியிருக்கிறது.
நாய் கூண்டில் சிறுமிகள்
இது ஏதோ ஒரு சில நாட்களில் நடந்த சம்பவம் அல்ல. கடந்த 1997 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், பிரிட்டனின் ரோதர்ஹாம் என்ற ஒரே ஒரு பகுதியில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பாலியல் கும்பல்களால் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து எம்.பி. ரூபர்ட் லோவ் என்பவர். நாடாளுமன்றத்தில் பேசும்போது மேற்கண்ட தகவல்களை அறிக்கையாக வாசித்தார்.. அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் அவரே நேரடியாகப் பேசி, அதன்மூலம் திரட்டிய வாக்குமூலங்களையும் அப்படியே நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார் ரூபர்ட் லோவ்.
இனவெறியர்கள்
இதையடுத்து, இவ்வளவு பெரிய கொடூரம் பல ஆண்டுகளாக நடக்கும்போது காவல்துறை என்ன செய்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால், தங்களை இனவெறியர்கள் என்று விமர்சித்து விடுவார்களோ என்ற பயத்திலேயே காவல்துறையும், உள்ளூர் அதிகாரிகளும் இந்த விவகாரத்தை இத்தனை காலம் மூடி மறைக்க முயன்றுள்ளதாகவும், சில போலீஸ் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், நாடாளுமன்றத்தில் உடைத்த இந்த சம்பவம், பிரிட்டன் அரசுக்கும், அந்நாட்டு சட்ட ஒழுங்கிற்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications