இந்தோனேசியாவில் ராணுவ வீரர்கள்- கிளர்ச்சியாளர்களிடையே கடும் சண்டை.. 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பதற்றமான பப்புவா பகுதியில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 18 கிளர்ச்சியாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிகள், அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1960 களின் முற்பகுதியில், இந்தோனேசியாவின் பப்புவா தீவு டச்சு காலனியாக இருந்து வந்தது. ஆனால் இப்பகுதியை இந்தோனேஷியா இணைத்துக் கொண்டது. ஐ.நா.வின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வாக்குச்சீட்டு முறைக்கு பின்னர் 1969 இல் பப்புவா இந்தோனேசியாவில் இணைக்கப்பட்டது. அப்போது வாக்கெடுப்பில் முறைகேடு நடந்ததாக கூறி, பப்புவா தீவில் கிளர்ச்சி படைகள் உருவாகின.இந்த கிளர்ச்சி படைகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இன்டன் ஜெயாவில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை வழங்குவதற்காக ராணுவ அமைதிப்படை முகாமிட்டுள்ளது. இந்த குழுவினரை குறி வைத்து, இராணுவ தர ஆயுதங்கள் மற்றும் அம்புகளுடன், ஆயுதம் ஏந்திய ஏராளமான கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 20 பேர் உயிரிழந்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இவான் ட்வி பிரிஹார்டோனோ கூறினார்.
துருக்கி பேச்சுவார்த்தையை திடீரென புறக்கணித்த ரஷ்ய அதிபர் புதின்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு
இதனிடையே கிளர்ச்சி படையான மேற்கு பப்புவா விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் செப்பி சம்போம் கூறுகையில், தங்கள் குழுவில் 3 பேர் மூன்று பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறினார். மீதமுள்ளவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட "அப்பாவி பொதுமக்கள்" என்று அவர் கூறினார்.
கிளர்ச்சி குழுவின் முக்கிய உறுப்பினரான பூமிவாலோ எனம்பியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக, புன்காக் ஜெயாவில் வெள்ளிக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்கள் இரண்டு போலீசாரைக் கொன்றதாக சம்போம் கூறினார். சண்டைக்கு பிறகு அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கிளார்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ராணுவத்தினர். மேலும் ராணுவம் தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் மறுத்தனர்.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications