ஆற்றில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி- 17 படுகாயம்..நேபாளத்தில் சோகம்
சித்வன்: நேபாளத்தில் உள்ள திரிஷோலி ஆற்றில் பஸ் கவிழ்ந்து விழுந்து 21 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேபாளத்தில் சித்வன் என்ற மாவட்டத்தில் நாராயன்காத்முக்லின் என்ற சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விடியற்காலை 4.45 மணி அளவில் திரிஷோலி ஆற்றில் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால் தடுப்புச் சுவரைத் தாண்டி 100 அடி ஆழமுள்ள திரிஷோலி ஆற்றில் பஸ் விழுந்தது. இதில் பயணம் செய்த 20 பேர் ஆற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிசிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இந்தப் பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் கிழக்கு நேபாள மலைபகுதியில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி 33 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications