ரஷ்யாவில் செல்ஃபி எடுக்கையில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளம்பெண் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் 21 வயது பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்து பலியானார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் அன்னா க்ருபெய்னிகோவா(21). சுற்றுலா பற்றி படித்துள்ளார். அவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பிற தோழிகளுடன் மாஸ்கோ நகரைச் சுற்றிப் பார்க்க சென்றார். அப்போது அவர் பாலத்தின் ஓரத்தில் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுக்கையில் நிலைதடுமாறி அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

அன்னா பற்றி ஆன்டன் என்பவர் கூறுகையில்,
அன்னா அமைதியானவர். ஆனால் மிகவும் உற்சாகமானவர். நாங்கள் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது அன்னா மட்டும் தனியாக சென்று செல்ஃபி எடுத்தார். திடீர் என அவர் அலறும் சப்தம் கேட்டது. அன்னா பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று யாரோ கூறினார்கள். அது ஜோக் என நான் முதலில் நினைத்தேன். ஆனால் மக்கள் அனைவரும் ஓடிப் போய் பார்த்தபோது தான் அன்னா இறந்ததை தெரிந்து கொண்டேன் என்றார்.
அன்னா குடிபோதையில் இருந்தாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அன்னா குடிபோதையில் இல்லை என்று அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் இந்த ஆண்டில் மட்டும் செல்ஃபி எடுக்கையில் 10 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications