24 மில்லியன் பேர் ட்விட்டரில் இருந்தும் ட்வீட் செய்வதே இல்லை
நியூயார்க்: ட்விட்டரை பயன்படுத்தும் 284 மில்லியன் பேரில் சுமார் 24 மில்லியன் பேர் ட்வீட்டே செய்வது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிர்வாகம் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷனிடம் ஆவணம் ஒன்றை சமர்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ட்விட்டரை பயன்படுத்தும் 284 மில்லியன் பேரில் சுமார் 24 மில்லியன் பேர் ட்வீட்டே செய்வது இல்லை. ட்விட்டரில் பலர் போலியான கணக்கு வைத்துள்ளனர். மாதத்தில் ட்விட்டரை அதிகம் பயன்படுத்துவோரில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே போலி கணக்கு வைத்துள்ளவர்கள்.
ட்விட்டரை பயன்படுத்துவோரில் 11 சதவீதம் பேர் ட்வீட்டெக், ஹூட்சூட் உள்ளிட்ட மூன்றாவது பார்ட்டி சாப்ட்வேரை பயன்படுத்தி ட்வீட் செய்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரை பயன்படுத்துவோரில் 8.5 சதவீதம் பேர் அதை பயன்படுத்தி ட்வீட் செய்வதே இல்லை. அவர்கள் வெறும் ரோபோக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications