For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோட்டமெல்லாம் பிணங்கள்.. 40 மனித பாகங்கள்.. தோண்ட தோண்ட அலறும் போலீசார்.. நடுங்க வைக்கும் சம்பவம்

போலீஸ் அதிகாரியின் தோட்டத்தில் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

Google Oneindia Tamil News

எல் சல்வடோர், (மத்திய அமெரிக்கா): பல வருடங்களாகவே இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயமாகி கொண்டிருந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது.. மொத்தம் 40 சடலங்கள் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

எல் சல்வடோர் என்ற நாட்டின் பெயரை கேட்டாலே பலரும் அதிர்ந்து போய்விடுவார்கள்.. இந்த நாடு, மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றாகும்..

நாடெங்கும் குற்றங்கள்தான் இங்கு பெருகி காணப்படும்.. அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது.. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து கிடக்கும்.. பல வருஷங்களாகவே இந்த நாடு இப்படித்தான்.

லாரி நிறைய பிணங்கள்.. சடலங்களுக்கு நடுவே.. திக் திக்கென உயிரை கையில் பிடித்து.. தொழிலாளர்கள்.. ஷாக்லாரி நிறைய பிணங்கள்.. சடலங்களுக்கு நடுவே.. திக் திக்கென உயிரை கையில் பிடித்து.. தொழிலாளர்கள்.. ஷாக்

சவால்

சவால்

பெண்களை கடத்தி கொண்டு போவது, பலாத்காரம் செய்வது, கொலை செய்வது போன்றவைகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.. ஆனால், பல பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போவதுதான் மிகப்பெரிய சவாலாக இந்த நாட்டு போலீசுக்கு உள்ளது.. இது தொடர்பான ஏகப்பட்ட கேஸ்கள் ஸ்டேஷனில் நிலுவையிலும் உள்ளன.

 தனி பங்களா

தனி பங்களா

இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் சன் சல்வடோர் நகரில் உள்ள ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ்... இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரிடையர் ஆகிவிட்டார்.. ஓய்வுக்கு பிறகு, சல்வடோர் நகரில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஹல்ஷுபா என்ற பகுதியில் தனியே ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

சந்தேகம்

சந்தேகம்

இப்படிப்பட்ட சூழலில்தான், காணாமல் போனதாக சொல்லப்படும் பெண்கள், ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ் பணியாற்றிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தான் பெருமளவு என்பது தெரியவந்தது.. எனவே, ஹிஹோ மீது சந்தேகம் திரும்பியது.. அதுவும் இல்லாமல், 2015-ம் ஆண்டு முதல் அதாவது இவர் ரிடையர் ஆனது முதலே பெண்கள் நிறைய பேர் மிஸ்ஸிங் என்பது தெரியவந்தது.

 பெரிய தோட்டம்

பெரிய தோட்டம்

இதையடுத்து, அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததால், ஹிஹோ தங்கி இருந்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்... அப்போது அவர் வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய தோட்டம் இருந்தது.. ஒருவேளை அந்த தோட்ட பகுதியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது.. இதையடுத்து, அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்ட ஆரம்பித்தனர்.. இப்போதுதான், அந்த இடத்தில் 24 மனித உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.. அந்த 24 உடல்களின் எலும்புகளும் சிதைந்த பாதங்களும் கிடந்தன.

 மனித உடல்கள்

மனித உடல்கள்

24 உடல்கள் தனியே தென்பட்டது. இதைதவிர வேறு சில மனித பாகங்களை வைத்து பார்த்தால், மொத்தம் 40 உடல்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.. இது இன்னும் முடியவில்லை.. தோட்டம் முழுக்க அதிகாரிகள் தோண்டி கொண்டிருக்கிறார்கள்.. இப்போதைக்கு கிடைத்த புதைக்கப்பட்டவை யாருடைய உடல்கள், எத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே இவை இங்கு புதைக்கப்பட்டன என்ற விசாரணையையும் இன்னொரு பக்கம் கையில் எடுத்துள்ளனர்.

மாயம்

மாயம்

மறுபக்கம், அந்த அந்த முன்னாள் அதிகாரி ஹிஹோவை கைது செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர்.. ஆனால், இவ்வளவும் செய்த அதிகாரி ஹிஹோ மாயமாகி உள்ளார்.. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. அதனால், அவரை தேடும் பணியும் மற்றொரு பக்கம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை கொலைகளையும் இவர் ஒருத்தரே செய்ய முடியாது என்பதால், இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமோ என்ற ரீதியில் விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன..!

English summary
24 people found at former El Salvador police officers garden
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X