தறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்!
சாலைவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி: அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விபத்துக்குள்ளானதில், 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கிளபாஸ் மாநிலத்தில் மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில், 50க்கு மேற்பட்டோர் இருந்தனர்.

சோயலோ என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டைஇழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது தூரத்தில் சாலையிலேயே கவிழ்ந்து விழுந்தது. இதில் லாரிக்குள் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக மீட்பு படையினர் விரைந்து சென்று லாரியில் சிக்கி கொண்டிருந்த சடலங்களை மீட்டனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 25 பேர் விபத்தினால் மரணடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications