மும்பை தவிர்த்து பெங்களூர், டெல்லியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம்: ஹெட்லி
நியூயார்க்: மும்பை தாக்குதலில் தொடர்புடைய சஜித் மிர் கற்பனை நபர் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில் அவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அடையாளம் காட்டியுள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று தொடர்ந்து 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

மேஜர் பாஷா
இந்தியாவில் ஆட்களை சேர்க்குமாறு கூறிய மேஜர் பாஷா பாகிஸ்தானின் 6வது பலோச் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர். மேஜர் பாஷா பின்னர் லஷ்கர் இ தொய்பாவிலும் அதன் பிறகு அல் கொய்தாவிலும் சேர்ந்தார்.

சஜித் மிர்
அபு அல் காமா, சஜித் மிர், அப்துல் ரஹ்மான் பாஷா ஆகியோரை நான் அடையாளம் காட்டியுள்ளேன். (சஜித் மிர் புகைப்படத்தை காண்பித்ததும் இவர் தான் என அடையாளம் காட்டினார் ஹெட்லி. இதன் மூலம் சஜித் மிர் கற்பனை நபர் என்று பாகிஸ்தான் கூறி வந்தது பொய் என்று தெரிய வந்துள்ளது.)

ஐஎஸ்ஐ
லஷ்கர் இ தொய்பாவை ஐஎஸ்ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒவ்வொரு முறை மும்பை சென்று வந்த பிறகு ஐஎஸ்ஐக்கு பிரத்யேக அறிக்கை அளித்தேன்.

பெங்களூர்
பெங்களூர் மற்றும் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அவர்கள் எதற்காக மும்பையை குறி வைத்தார்கள் என எனக்கு தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications