270 பேர் பலியான இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: மாஜி அமைச்சர் பிள்ளையான் அதிரடி கைது-தமிழர்கள் கொண்டாட்டம்!
கொழும்பு: இலங்கையில் 2019-ம் ஆண்டு 275 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தின தற்கொலைப் படை தாக்குதல்கள் மற்றும் இலங்கை தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை ஆகிய வழக்குகளில் இலங்கை முன்னாள் இணை அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர் பிள்ளையான். பின்னர் கருணாவுடன் இணைந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் கருணா-பிள்ளையான் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியையும் நடத்தினார் பிள்ளையான்.

2008-ம் ஆண்டு இலங்கை கிழக்கு மாகாண முதல்வராகவும் பதவி வகித்தார் பிள்ளையான். முன்னாள் தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்து போட்டியிட்டு எம்பியானார் பிள்ளையான். அப்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அண்மையில் கருணாவுடன் இணைந்து செயல்படுவதாக பிள்ளையான் அறிவித்தார். கருணாவும் பிள்ளையானும் கூட்டாக அறிவித்த சில நாட்களிலேயே பிள்ளையான் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 270 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications