நைஜிரியாவின் காய்கறி மார்க்கெட்டில் தற்கொலைப்படை தாக்குதல்.. 30 பேர் பலி
நைஜிரியாவில் தற்கொலை படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதில் 67 பேர் காயமுற்றனர்.
அபுஜா: நைஜிரியாவின் வடகிழக்கு மாகணமான அதமாவாவில் உள்ள மதாகலியில் கூட்டம் நிறைந்த தந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும், இதில் 67 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் இரண்டு தற்கொலைப் படை பெண் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் நிகழ்ந்தது உண்மைதான் என்றும் ராணுவ செய்தித்தொடர்பாளர் பதாரே அகிண்டோன் ஜின்குவா செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்தத் தாக்குதல் மதாகலி சந்தையின் முன் பின் ஆகிய இரண்டு வாயில்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டதாகவும், அப்போது மக்கள் பாதுகாப்புக்காக அங்கும் இங்குமாக பதறி அடித்து சிதறி ஓடினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதாகலி சந்தை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை தோறும் கூடும் என்றும் அங்கு காய்கறி, உணவு தானியங்கள், விலங்குகள் விற்பனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தற்கொலைத் தாக்குதல் சம்பவம் உணவு தானியம் மற்றும் விலங்குகள் விற்பனைப் பகுதியில் நடந்ததாக மாவட்ட அதிகாரியான யூசுப் முகமது தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். மதாகலி சந்தை யோகலியில் இருந்த 276 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு போகோ காரம் தீவிரவாதிகள் இந்நகரை கைப்பற்றியதாகவும், ஆனால் அதன்பின்னர் அந்நகரத்தினை ராணுவம் 2015-ம் ஆண்டு மார்ச் இல் மீட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015-ம் ஆண்டு டிசம்பர் 28-ல் இந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு பெண் தீவிரவாதிகள் மதாகலி மோட்டார் பார்க்கில் நடத்திய தாக்குதலிலும் 30 பேர் பலியாகினர்.16 பேர் காயம் அடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications