நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் உருண்ட பேருந்து... 33 பேர் பலி - 43 படுகாயம்
காத்மண்டு: நேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர். 43 பேர் படுகாயமடைந்தனர்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் சுமார் 85 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 1000 படி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 43 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர்.
தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுட்டனர். மேலும், நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 15 பேரை காத்மண்டிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக அந்நாட்டு வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பிரசண்டாவும் மீட்புப் பணிகளை துரித படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மோசமான சாலைகளும், அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வதும் விபத்துக்களுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications