ஸ்வாசிலாந்தில் அழகிப் போட்டிக்கு செல்லும் வழியில் பயங்கர விபத்து: 38 இளம்பெண்கள் பலி
பபானே: ஸ்வாசிலாந்தில் டிரக் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் அழகிப் போட்டிக்கு சென்று கொண்டிருந்த 38 இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் மனைவியை தேர்ந்தெடுக்கும் அழகிப் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப் பெண்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பினர்.

அப்படி அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அழகிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பபானே மற்றும் மான்சினி ஆகிய முக்கிய நகரங்கள் இடையே கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரக்கில் இருந்த 38 இளம்பெண்கள் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாளைய அழகிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமான மன்னரின் முன்பு கன்னிகள் நடனம் ஆடுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் அழகி மன்னரின் அடுத்த மனைவியாவார். முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியின்போது மன்னர் தனது 14வது மனைவியை தேர்வு செய்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தால் தேசம் துயர் அடைந்துள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார். ஸ்வாதி தனது தந்தை இறந்த பிறகு 1982ம் ஆண்டு ஸ்வாசிலாந்தின் மன்னர் ஆனார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications