லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 2 இந்தியர் விடுதலை! 2 பேரின் கதி என்ன?
திரிபாலி: லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 இந்தியர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
ஈராக், சிரியா, லிபியாவில் உலகின் மிக கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கை ஓங்கி இருக்கிறது. ஏற்கனவே 39 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர்.

அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும் 39 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. இதேபோல் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
இந்த பிணையக் கைதிகளை விடுதலை செய்வதற்கு பெரும் தொகை பணத்தைக் கேட்பதும் அப்படி தர மறுத்தால் கைதிகளை மிகவும் கோரமாக கொலை செய்வதும் இந்த தீவிரவாத கும்பலின் வாடிக்கை.
இந்த நிலையில் லிபியாவின் திரிபோலி அருகே உள்ள சிர்டி என்ற நகரில் இருந்து 4 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இவர்கள் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட 4 இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இவர்களில் 2 பேர் கர்நாடகா, 2 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடத்தப்பட்டோரில் 2 பேரை தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எஞ்சிய 2 பேரின் நிலை குறித்து தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்களை சேகரித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications