ஹஜ்: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு
மினா: மெக்கா ஹஜ் யாத்திரையில் மினா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் ஜார்க்கண்ட், ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணம் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். மெக்கா அருகேயுள்ள மினாவில் ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்தனர். 863 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோருக்கு அருகே உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நெரிசலில் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 தமிழர் உட்பட 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்களில் 9 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் ஜார்க்கண்ட்; ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
உயிரிழந்த இந்தியர்கள் விவரம்:
1) சம்சுதீன் முகமது, தமிழ்நாடு (பாஸ்போர்ட் எண்: (G6849546)
2) மொகிதீன் பிச்சை, தமிழ்நாடு (பாஸ்போர்ட் எண்:( J5669393)
3) முகமது ருஷ்தம் அலி, ஜார்க்கண்ட்
4) நியாசுல் ஹக் மன்சூருல் ஹக், ஜார்க்கண்ட்
5) சலீம் யூசுப் சேக், மகாராஷ்டிரா
6) முகமது ஹனீப் ஹசன் பாய் சேக், குஜராத்
7) சேக் மதினாபீபி முகமது, குஜராத்
8) திவான் அயூப்ஷா, குஜராத்
9) திவான் ஜூபேதாபீபீ, குஜராத்
10) சோடா ரெஹ்மத் ஹூசாம், குஜராத்
11) பெதாரா பாட்மாபென் கரீம், குஜராத்
12) போலிம் ஹாவ்பாய் இசாக், குஜராத்
13) நகோரி ஜோராபீபி, குஜராத்
14) நகோரி ருக்ஷானா முகமது இசாக், குஜராத்
சம்சுதீன்
மினா நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழரான சம்சுதீன், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் 13 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ஹஜ் யாத்திரை நெரிசலில் மயிலாடுதுறை சம்சுதீன், தென்காசி முகதீன் பிச்சை, திருச்சி ரெஜிமன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications