4 கொலை செய்ததாக 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை: எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு
கெய்ரோ: எகிப்தில் 4 கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு கெய்ரோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருக்கும் நீதிமன்றம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு உலக மக்களை வியக்க வைத்துள்ளது. காரணம் அகமது மன்சூர் கர்னி என்ற 4 வயது சிறுவன் 4 கொலைகள் செய்ததாகக் கூறி நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை அளித்துள்ளது.

2014ம் ஆண்டு அதாவது அகமதுக்கு 2 வயது இருக்கையில் அவர் 4 கொலைகள் செய்து, அரசு சொத்துக்களை சேதம் செய்து மற்றும் சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் 115 பேருடன் சேர்த்து அகமதுவின் பெயரும் சேர்க்கப்பட்டது. அகமதின் பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பு படையிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் அகமதுவின் பெயர் சேர்க்கப்பட்டதில் தவறு ஏற்பட்டுவிட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications