நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி
காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை, 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேரை காணவில்லை என்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இமயமலை பகுதியின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியிலும், அதன் தெற்கு சமவெளிகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தின் தாழ்வான பகுதிகளை பெரு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரம் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர். மழை நீர் சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கிழக்கு நேபாளத்தில் பாயும் கோசி நதியில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேபாளத்தில் உள்ள மகோத்தரி பகுதியில் இருக்கும் முக்கிய நெடுஞ்சாலை பாலம் பலத்த சேதமடைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடயே எதிர்வரும் நாட்களில் இன்னும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நேபாள வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 100 மி.மீ வரை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் இன்னும் கவனமுடன் இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் தற்போது கொட்டி தீர்த்து வரும் கனமழை பற்றி கவலை தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை, மழைக்கால முறைகளில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளதால் எதிர்காலத்தில் கடுமையான வறட்சி அல்லது இன்னும் அதி தீவிர மழை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நேபாளம் தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications