நேபாளத்தைத் தொடர்ந்து பாக்.கிலும் நிலநடுக்கம்: அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் படுங்க்வா மாகாணத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் படுங்க்வா மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தான் அருகே உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் 144 கிலோமீ்ட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வானிலை மைய துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலகந்த், ஸ்வாட் மற்றும் திர் மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 4வது நாளில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2013ம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 7.7 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500 பேர் பலியாகினர். அதற்கும் முன்பு 2005ம் ஆண்டில் 7.6 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications