ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்... 2 பெண்கள் உட்பட 5 இந்தியர்கள் போட்டி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 150 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 76 இடங்களுக்கும் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 1987ம் ஆண்டுதான் இப்படி இரு சபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. அதன் பின்னர் இப்போதுதான் இப்படி சேர்த்து நடைபெறுகிறதாம்.

இந்தத் தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களில் ஐந்து பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். 51 வயதான அலெக்ஸ் பாதல் என்ற சீக்கியர் கிரீன்ஸ் பார்ட்டி சார்பாக போட்டியிடுகிறா். 43 வயதான லிசா சிங் தொழிலாளர் கட்சி சார்பில் களம் கண்டுள்ளார். இவர் பிஜியை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
1989ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிக்கும் சசி பட்டி., பெங்களூரைச் சேர்ந்த இந்திய பெற்றோருக்குப் பிறந்தவரான கிறிஸ் காம்பியன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இன்னொருவர் 39 வயதான மோஹித் குமார். இவர் இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இவர் லிபரல் பார்ட்டி சார்பில் போட்டியிடுகிறார். இவர் 1994ம் ஆண்டு பரீதாபாத்திலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்தவர் ஆவார்.
ஆஸ்திரேலயா நாடாளுமன்றத்திற்கு ஜூலை 2ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மே 8ம் தேதிதான் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications