For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

300+ அடித்தும் தோல்வி அடைந்தது எப்படி.. நியூஸியிடம் "மொத்து" வாங்கிய இந்தியா.. 5 முக்கிய காரணங்கள்?

Google Oneindia Tamil News

கேப் டவுன்: நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்து உள்ளது. இந்த தோல்விக்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அவசரப்பட்டு அடித்து விக்கெட்டுகளை இழக்காமல் 40 இவர்கள் பொறுமையாக அடித்து கடைசி ஓவர்களில் இந்திய அணி வேகமாக ஆடி 306 ரன்களை அடித்தது.

இந்திய அணியில் ஓப்பனிங் இறங்கிய தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். 76 பந்துகள் பிடித்த அவர் 80 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தும் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன.

இந்தியாவுக்குள் போட்டியா? தமிழகம் பெரிய மாநிலம்.. உலக நாடுகளுடன் போட்டி! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்இந்தியாவுக்குள் போட்டியா? தமிழகம் பெரிய மாநிலம்.. உலக நாடுகளுடன் போட்டி! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

காரணம் 1 - டாஸ் தோல்வி

காரணம் 1 - டாஸ் தோல்வி

இந்த போட்டியில் டாஸ் தோல்வி அடைந்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். ஏனென்றால் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச். அதோடு கிரவுண்ட் மிக மிக சின்ன கிரவுண்ட். எவ்வளவு அதிக இலக்கு வைத்தாலும் எளிதாக அதை அடைய முடியும். இதில் டார்கெட்டை அடைவது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. இரண்டாவது பேட்டிங் செய்யும் போது பந்தை அப்படியே ஸ்வீப் செய்தே சிக்ஸ், பவுண்டரி அடிக்க முடியும். ஆனால் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது. இது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

 காரணம் 2 - பவுலர்கள்

காரணம் 2 - பவுலர்கள்

இரண்டாவது இந்திய அணியில் உம்ரான் மாலிக் மட்டுமே இன்று நன்றாக பவுலிங் செய்தார். அவர் மட்டும் தனது பவுலிங்கில் நிறைய வெரைட்டிகளை காட்டினார். 15.1 ஓவரில் டெவன் கான்வாய் 24 ரன்கள் இருந்த போது அவரின் விக்கெட்டை எடுத்தார். அதேபோல் 19.5 ஓவரில் டெரி மிட்சல் 11 ரன்கள் இருந்த போது அவரின் விக்கெட்டை எடுத்தார். மற்ற பவுலர்கள் இவருக்கு பெரிதாக சப்போர்ட் கொடுக்கவே இல்லை. அர்ஷ்தீப் சிங் வெறும் 8.1 ஓவர்கள் வீசி 68 ரன்கள் கொடுத்தார். சாஹல் 10 ஓவர்கள் வீசி 67 ரன்கள் கொடுத்தார். உம்ரான் 2, ஷரத்துல் 1 விக்கெட் தவிர மற்ற வீரர்கள் யாருமே இன்று விக்கெட் எடுக்கவில்லை.

காரணம் 3 - மிடில் ஆர்டர்

காரணம் 3 - மிடில் ஆர்டர்

இன்னொரு பக்கம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருந்தது. மோசமாக இருந்தது என்றால் பேட்ஸ்மேன்கள் ஸ்லோவாக டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆடினார்கள். கடைசியில் சுந்தர், ஷ்ரேயாஸ் இருவரும் 5 ஓவர்களில் 54 ரன்கள் அடித்தனர். மற்றபடி மிடில் ஆர்டரில் இந்திய அணி மிக மிக மெதுவாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியது. ஆனால் நியூசிலாந்து அணியில் தொடக்கத்தில் இருந்தே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 120 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்கள்.இந்திய அணி நினைத்து இருந்தால் 320க்கும் மேல் அடிக்க முடியும். ஆனால் இந்திய அணி 306க்கு கீழ் சுருண்டது.

காரணம் 4 - கூடுதல் ஆப் ஸ்பின்

காரணம் 4 - கூடுதல் ஆப் ஸ்பின்

இந்த பிட்சில் கூடுதல் ஆப் ஸ்பின் பவுலர் இருந்திருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும். ஆனால் இந்திய அணி ஒரு லெக் ஸ்பின் பவுலருடன் சென்றது. தேவையின்றி சாஹலை அணியில் எடுத்தது இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. லெக் ஸ்பின் பவுலர்களை நியூசிலாந்து அணி பொதுவாகவே சிறப்பாக ஆடுவார்கள். இருந்தும் லெக் ஸ்பின் பவுலர்களை இந்திய அணி இன்று எடுத்தது. வாஷிங்க்டன் சுந்தருக்கு கூடுதலாக ஒரு ஆப் ஸ்பின் பவுலருடன் சென்று இருந்தால் இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும்.

காரணம் 5 - கேப்டன்சி

காரணம் 5 - கேப்டன்சி

இன்னொரு பக்கம் இந்திய அணியில் தவானின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. பவுலிங் ரொட்டேஷன் சரியாக இல்லை. பீல்டிங் செட்டப்பும் மிக மோசமாக இருந்தது. . இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும் சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே இன்று சொதப்பலாக இருந்தது. இதுவே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

English summary
5 Reasons why did Team India lose the first ODI match against the New Zealand?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X