தொடரும் அட்டூழியம்.. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. டேனியல் ஆரோக்கியம் என்பவரின் விசைப்படகுடன் 7 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் படகினை இலங்கை கடற்படை சிறைப்பிடித்திருந்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறார்கள். தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இப்படி மீன்பிடிக்கும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது.

அடிக்கடி இலங்கை கடற்படையினர் இத்தகைய செயலில் ஈடுபடுவதால் தமிழக அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி சார்பிலும் மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். எனினும் இதற்கு ஒரு முடிவு கிடைத்தப்பாடில்லை. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் மற்றும் அவர்களது படகினையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் அவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 7 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் வந்த படகினையும் சிறைப்பிடித்து சென்றனர். தலை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications