ப்ரிகோஜினை விடுங்க.. புதினை எதிர்த்த அந்த 7 பேர்.. நேர்ந்த கோர முடிவுகள் தெரியுமா.. இதை பாருங்க!
மாஸ்கோ: வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கிடையே எவ்ஜெனி ப்ரிகோஜின் போலவே புதினை எதிர்த்த 7 பேருக்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரஷ்ய வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், ஜெட் விமானம் விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 62 வயதான ப்ரிகோஜின், ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கலகத்தை மேற்கொண்டவர் இவர்..

அப்போது ப்ரிகோஜினுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் இப்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரை போலவே புதினை எதிர்த்த நபர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
அலெக்ஸி நவல்னி: ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவல்னி அதிபர் புதின மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். அப்போது தான் திடீரென சைபீரியாவில் அவர் மீது கொலை முயற்சி நடந்தது. அவரது உள்ளாடையில் விஷம் வைக்கப்பட்டது. அவருக்கு நரம்புகளை முடக்கும் நோவிச்சோக் என்ற கெமிக்கலை அளித்துள்ளனர். மருத்துவச் சிகிச்சைக்காகக் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ஜெர்மனிக்கு அழைத்து வரப்பட்ட இவர், தீவிர சிகிச்சைக்குப் பின்னரே குணமடைந்தார்.
பல மாத சிகிச்சைக்குப் பிறகு அவராகவே முன்வந்து ரஷ்யாவுக்குத் திரும்பிய நிலையில், நவல்னி கைது செய்யப்பட்டார். பல்வேறு குற்றச்சாடுகளில் அவருக்கு 11+ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை விதிக்கப்பட்டுள்ளது.
செர்ஜி ஸ்கிரிபால்: ரஷ்ய உளவுத் துறை அதிகாரியான இவர், அந்நாட்டின் உளவுத் துறையை ஏமாற்றி பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு ரகசியங்களை அனுப்பி வந்தார். இதனிடையே கடந்த 2018இல் செர்ஜி ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் பிரிட்டனிலுள்ள கதீட்ரல் நகரமான சாலிஸ்பரியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டருக்கு வெளியே மயக்கமடைந்த நிலையில், கண்டறியப்பட்டனர். அவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னரே குணமடைந்தனர்.
நாவல்னிக்கு தரப்பட்ட நோவிச்சோக் விஷம் தான் இவர்களுக்கும் தரப்பட்டு இருந்தது. இது சோவியத் ஒன்றியத்தால் 1970, 1980களில் டெவலப் செய்யப்பட்ட பாய்சன் ஆகும். இருப்பினும், தனக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
விளாடிமிர் காரா-முர்சா: இவரும் ரஷ்யாவில் இருந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவர் தான்.. கடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அவருக்கு விஷம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. அவரது உடலில் அதிக அளவில் பாதரசம், தாமிரம், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் ஆகியவை இருந்தது.. இதன் மூலம் அவரை கொலை செய்ய ரஷ்யா முயன்றதாகக் கூறப்படுகிறது.
அலெக்சாண்டர் லிட்வினென்கோ: இவரும் ரஷ்யாவில் முன்னாள் உளவுத் துறை அதிகாரி தான்.. கடந்த 2006ஆம் ஆண்டில் இவர் தனது 43 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. லண்டனில் உள்ள மில்லினியம் ஹோட்டலில் அரிய கதிரியக்க ஐசோடோப்பான பொலோனியம்-210 கலந்த கிரீன் டீயை குடித்து இவர் உயிரிழந்தார்.
புதின் உத்தரவின் பெயரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ரஷ்யா வழக்கம் போல இதையும் மறுத்தே இருந்தது. ரஷ்யா உளவு அதிகாரியான இவர், கொலை செய்யப்படும் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவிலிருந்து பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
அலெக்சாண்டர் பெரெபிலிச்னி: 44 வயதான இவர், கடந்த 2012இல் ஜாகிங் சென்ற நிலையில், லண்டனுக்கு வெளியே அவரது சொகுசு வீட்டின் அருகில் இறந்து கிடந்தார். ரஷ்யாவின் பணமோசடி திட்டம் குறித்த சுவிஸ் விசாரணைக்கு உதவிய இவர், அதன் பிறகு 2009 இல் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இன்னுமே மர்மமாகவே இருக்கிறது.
விக்டர் யுஷ்செங்கோ: முன்பு உக்ரைன் கிட்டதட்ட ரஷ்யாவின் மறைமுக கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சுதந்திர நாடாக இருந்த போதிலும் ரஷ்யா நினைக்கும் தலைவர் தான் அங்கே ஆட்சியில் இருப்பார்.. 2004இல் உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விக்டர் யுஷ்செங்கோ மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீவ் நகருக்கு வெளியே டின்னர் சாப்பிட்ட போது, அவருக்கு பாய்சன் வைக்கப்பட்டது.
அவரது உடலில் வழக்கமாக இருப்பதை விட 1,000 மடங்கு அதிக டையாக்சின் இருப்பது கண்டறியப்பட்டது. விஷத்தால் அவரது முகமும் உடலும் சிதைந்து போய் இருந்தது. இதனால் அவருக்கு ஏகப்பட்ட ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டது.
அண்ணா பொலிட்கோவ்ஸ்கயா: ரஷ்யாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து செய்தியை வெளியிட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயா, கடந்த 2006இல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீடு திரும்பிய போது அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். 48 வயதான பொலிட்கோவ்ஸ்காயாவின் கொலை மேற்கத்திய நாடுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவில் பணிபுரியும் செய்தியாளர்கள் எந்தளவுக்கு ஆபத்தில் உள்ளனர் என்பதை இது காட்டியது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications