1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்: அதில் 6 மலேசிய விமானம் மாயமான அதே பகுதியில்
கோலாலம்பூர்: கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை.
முன்னதாக மலேசிய விமானம் மாயமான பகுதியில் 6 விமானங்கள் மாயமாகியுள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?

83 விமானங்கள்
கடந்த 1948ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 83 விமானங்கள் அதுவும் பெரிய விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மாயமாகியுள்ளன. இது தவிர சிறிய ரக விமானங்கள் வேறு மாயமாகியுள்ளன.

6 விமானங்கள்
இதுவரை 83 விமானங்கள் மாயமாகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 விமாங்கள் தற்போது மலேசிய விமானம் மாயமான பகுதியில் மாயமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1993
1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி பான் மலேசியா ஏர் டிரான்ஸ்போர்ட் விமானம் இந்தோனேசியாவின் மெடான்-பொலோனியா விமான நிலையத்தில் இருந்து கிளம்பி பன்டா அசேவில் உள்ள பிளாங் பின்டாங் விமான நிலையத்திற்கு செல்கையில் வடக்கு சுமத்ரா பகுதியில் மாயமானது. அந்த விமானத்தில் 3 சிப்பந்திகள் உள்பட 14 பேர் இருந்தனர். அந்த விமானம் மாயமானது மாயமானது தான்.

1983
உபாலி ஏர் விமானம் என்482யூ 6 பேருடன் கடந்த 1983ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு கிளம்பியது. இலங்கை கோடீஸ்வரர் உபாலி விஜேவர்தனேவுக்கு சொந்தமான அந்த விமானம் மலாக்கா ஜலசந்தி பகுதியில் மாயமானது. விமானத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

1961
கருடா இந்தோனேசியா ஏர்லைன்ஸ் விமானம் பிகே- ஜிடிஒய் 1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி இந்தோனேசியாவின் ஜுவான்டா விமான நிலையத்தில் இருந்து அதே நாட்டில் உள்ள சுல்தான் அஜி முகமது சுலைமான் விமான நிலையத்திற்கு சென்றது. 26 பேருடன் சென்ற விமானம் மாயமானது. அது கடலில் விழுந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

1974
வானிலை உளவு விமானமான ஸ்வான் 38 1974ம் ஆண்டு தென் சீன கடல் பகுதியில் மாயமானது. 4 நாட்கள் தேடியும் விமானம் கிடைக்கவே இல்லை. இதையடுத்து அதில் பயணித்த 6 பேரும் இறந்ததாக கருதப்பட்டது.

1935
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சார்லஸ் கிங்ஸ்போர்டு ஸ்மித் என்பவர் விமானம் ஓட்டுவதில் புதிய சாதனை படைக்க 1935ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி தனது லாக்ஹீட் ஆல்டெய்ர் மோனோபிளேனில் கிளம்பினார். அவரது விமானம் அந்தமான் கடல் பகுதியில் தொடர்பை இழந்தது. அதன் பிறகு விமானத்தையும் சரி, அவரையும் சரி கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் கடலில் விழுந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

1932
1932ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஆங்கிலேயர்களான ஜி.டபுள்யூ. சால்ட் மற்றும் எப்.பி. டெய்லர் ஆகியோர் ஒரு விமானத்தில் பர்மாவில் இருக்கும் மாலமைன் நகரில் இருந்து ரங்கூனுக்கு சென்றனர். அவர்களின் சிறிய ரக விமானமான ஜி-ஏஏகேஏ தென் பர்மாவில் இருக்கும் மார்தாபான் வளைகுடாவில் மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. சம்பவம் நடந்த அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மார்தபான் வளைகுடா பகுதியில் விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று கிடைத்தது. ஆனால் அது அந்த 2 பேர் சென்ற விமானத்தின் பாகம் தான் என்பது உறுதி செய்யப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications