'தெரியாம சுட்டு இருப்பாங்க' துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்யா ராணுவம்.. ஒரு கையை இழந்த சிறுமி உருக்கம்
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் சூழலில், 9 வயது சிறுமியை நோக்கி ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24 தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. குறிப்பாக, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கடந்த மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

உக்ரைன் போர்
இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் உக்ரைன் நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா ராணுவம் தனது ஷெல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நகரில் உள்ள குடியிருப்புகளைக் குறி வைத்தும் அப்பாவி மக்களைக் குறி வைத்தும் ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் கூட, உக்ரைன் பொதுமக்கள் தங்கி இருந்த தியேட்டர் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பான சாட்டிலட் படங்களும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

9 வயது சிறுமி
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தினர் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஒருவருக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுமி தனது இடது கையையே இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முக்கிய அறுவை சிகிச்சை ஒன்றுக்குப் பின்னர் அவர் உயிர் பிழைத்துள்ளார். இருப்பினும், மருத்துவர்கள் அவரை கைப்பற்ற அவரது கையின் ஒரு பகுதியை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த சிறுமி சாஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு
9 வயதான சிறுமி சாஷா தனது குடும்பத்தினருடன் ஹோஸ்டோமலில் நகரில் இருந்து வெளியேற முயன்ற போது, மேற்கு கீவ் நகரில் ரஷ்யா வீரர்கள் அவர்கள் சுட்டுள்ளனர். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் சாஷாவின் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சிறுமி கூறுகையில், "ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விபத்து என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் என்னைக் காயப்படுத்த நினைத்திருக்க என்றும் நான் நம்புகிறேன்.

அச்சம்
அவர்களைக் கண்டதும் எனக்குப் பயம் வந்துவிட்டது. உடனடியாக அவரது சகோதரிக்குப் பின்னால் ஓடிவிட்டேன். இருந்தும் அவர்கள் என்னைக் கையில் சுட்டனர். அப்போது நான் எனது சுயநினைவை இழந்துவிட்டேன். அதன் பின்னர் யாரோ என்னைப் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எனக்கு அவர்கள் முதலுதவி கொடுத்தனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று அவர் தெரிவித்தார். கடந்த வாரம் அவரது குடும்பத்தினருடன் நாட்டில் இருந்து வெளியேற முயலும் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

சிசிடிவி வீடியோ
உக்ரைன் போர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களைக் குறி வைத்தே தாக்குதலை நடத்தி வருவதாக ரஷ்யா தரப்பில் தொடர்ந்து கூறி வருகிறது. இந்தச் சூழலில் 9 வயது சிறுமி மீது ரஷ்யா துப்பாக்கி நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, கடந்த வாரம் வயதான தம்பதி சென்ற கார் மீது ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications