அடேய் அதென்ன மங்கி மாஸ்கா இல்ல முகமூடியா? ஆமா அந்த 2 ஓட்டை எதுக்கு? பராக்கு பாக்கவா? முழிக்கிறத பாரு
ஆக்லாந்து: நியூசிலாந்தில் விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை முகக் கவசத்தை முகம் முழுக்க அணிந்து கொண்டு பயணம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகி வருகின்றன. பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்டவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாஸ்க் அணிவதன் நோக்கத்தையே பலர் புரிந்து கொள்ளாமல் உள்ளனர். போலீஸுக்கும் அபராதத்திற்கும் பயந்து கொண்டு தாடையில் தாடி போல் மாஸ்க் அணிகிறார்களே தவிர கொரோனாவுக்கு யாரும் பயந்தபாடில்லை.

பொது இடங்கள்
இதை மருத்துவ குழுவினர் எத்தனையோ முறை வலியுறுத்தியும் பொது இடங்களில் மூக்கை விட்டுவிட்டு வாயையும் தாடையையும் மூடிக் கொள்கிறார்கள். ஆனால் கொரோனா மூக்கு வழியாகவும் பரவும் என்பது இவர்களுக்கு ஏனோ தெரியவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

மிகச் சிறிய குழந்தைகள்
மிகச் சிறிய குழந்தைகளுக்கு முகக் கவசம் அணிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி எடுக்கப்பட்டது. ஆக்லாந்திலிருந்து வெலிங்கடன் செல்லும் விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

குழந்தை
அதில் ஒரு பெண், தனது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த குழந்தை பெரியவர்கள் பயன்படுத்தும் சர்ஜிக்கல் மாஸ்க்கை முகம் முழுவதும் போட்டுக் கொண்டுள்ளது. கண்கள் பகுதியில் மட்டும் இரு ஓட்டைகள் போடப்பட்டுள்ளன. அந்த விமான பயணத்தில் அந்த மாஸ்குடன் குழந்தை ஜாலியாக குதிப்பது, விளையாடுவது என இருந்தது.

சிரிப்பு
இந்த புகைப்படம்தான் வைரலாகி வருகிறது. என்னதான் இந்த புகைப்படம் பார்க்கும் போது சிரிப்பை வரவழைத்தாலும் இதை கவலைக்குரிய விஷயமாகவே பலர் பார்க்கிறார்கள், கண்களில் ஓட்டை போட்டுவிட்டால் போதுமா அந்த குழந்தை எப்படி சுவாசிக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் தனக்கு கிடைத்த மாஸ்கை வைத்து தனது குழந்தையை அழகாக அந்த பெண் பாதுகாத்து வருகிறார் என்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications