Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடங்களில் புர்கா அணிய தடை.. சுவிட்சர்லாந்திலும் அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

Subscribe to Oneindia Tamil

சூரிச்: பொது இடங்களில் புர்கா, ஹிஜாப் அணியக்கூடாது என்று பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனை ஏற்று சில நாடுகள் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்நிலையில் இந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் புதியதாக இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு மதங்களை பின்பற்றி வருகின்றனர். இப்படி இருக்கையில் அந்தந்த மத வழக்கத்தின்படி, ஆடைகளை அணிந்துக்கொள்கின்றனர். ஆனால் சில நாடுகளில் இது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வலதுசாரி அரசுகள் ஆட்சி செய்யும் நாடுகளில் இது தொடர்பாக சட்டங்களே இயற்றப்படுகின்றன. இந்த நாடுகளின் வரிசையில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது. அதாவது இந்நாட்டில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

A bill to ban the burqa in Switzerland has been passed in the countrys parliament

இதற்கான சட்டத் திருத்தம் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலவை, கீழவை என இரண்டு அவைகள் கொண்ட இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில், கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய வலதுசாரி அரசாங்கம் இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. மட்டுமல்லாது நாடு முழுவதும் வாக்கெடுப்பும் நடத்தியது. இதில் சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக அதிக வாக்குகள் பதிவான நிலையில் மேலவையிலும் இது நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து தற்போது கீழவையில் நிறைவேறி சட்டமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் சுமார் ரூ.91 ஆயிரத்தை அபராதமாக செலுத்த நேரிடும். சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியத்தின் செல்வாக்கை அதிகரிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. என்னதான் பெரும்பான்மையான மக்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தாலும், இஸ்லாமிய குழுக்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.

இஸ்லாமிய எதிர்ப்புணர்வை நாடு முழுவதும் பரப்பவே தேசிய அளவிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன. மேற்குறிப்பிட்டதைப்போன்று புர்காவை தடை செய்யும் முதல் நாடு சுவிட்சர்லாந்து கிடையாது. இதற்கு முன்னரே பிரான்ஸ், சீனா, பெல்ஜியம், டென்மார்க், இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரியா, பல்கேரியா, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.

இது ஒருபுறம் இருக்கையில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் புர்கா, ஹிஜாப் போன்றவை அணியாமல் பொதுவெளியில் காணப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஈரானில் இஸ்லாமிய மதம் வலியுறுத்தும் ஆடைகளை தவிர மற்ற ஆடைகளை அணிந்து பொது வெளியில் வருபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் அந்நாட்டு சட்டத்தில் இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+