துப்பாக்கி முனையில் அப்பா.. துணிச்சலாக செயல்பட்ட மகள்.. திருடர்களை ஓடவிட்ட 8 வயது சிறுமி -வீடியோ
தன் வீட்டில் திருட வந்த நான்கு திருடர்களை ஓட ஓட துரத்தி இருக்கிறார் 8 வயது சிறுமி ஒருவர்.
மணிலா: தன் வீட்டில் திருட வந்த நான்கு திருடர்களை ஓட ஓட துரத்தி இருக்கிறார் 8 வயது சிறுமி ஒருவர். இந்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கவைட் என்று பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 8 வயது நிரம்பிய ப்ரியேல் மினியா அல்பா என்ற சிறுமிதான் இந்த சாகசத்திற்கு சொந்தக்காரி.
இந்த சிறுமி திருடர்களை துரத்தும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இவருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
[ பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் 'செக்கச் சிவந்த வானம்'! வலுக்கும் கண்டனங்கள் ]

டிவிடி விற்பவர்கள்
சிறுமி ரியேல் மினியா அல்பா வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான்கு பேர் சிடி விற்க வந்து இருக்கிறார்கள். வீட்டிற்குள் வந்த அவர்கள் துப்பாக்கி முனையில் வீட்டில் இருந்து பொருட்களை எல்லாம் தங்கள் பைகளில் எடுத்து வைத்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி மட்டும் வீட்டிற்கு வெளியே உள்ளே நடப்பது எதுவும் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்பாவை தாக்கினார்கள்
இந்த நிலையில் திருடன் ஒருவன் சிறுமி ரியேல் மினியா அல்பாவிற்கு முன்பே, அவளின் அப்பாவை போட்டு அடித்து இருக்கிறான். இன்னொரு திருடன் துப்பாக்கி முனையில் எல்லோரையும் நிற்க வைத்துவிட்டு வெளியேற முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த நான்கு திருடனில் ஒருவன் அந்த சிறுமி மீது தடுக்கி கீழே விழுந்துள்ளான். இது வீடியோவாக வந்துள்ளது.

என்ன துணிச்சல்
உடனே சுதாரித்துக் கொண்ட அந்த சிறுமி, அந்த திருடனின் கையில் இருந்த பையை பிடுங்கி இருக்கிறாள். அதன்பின் கீழே விழுந்த பணத்தை எல்லாம் வெகுவேகமாக எடுத்து பாதுகாத்துள்ளார். அது மட்டுமில்லாமல் வேகமாக அந்த திருடர்களை துரத்தி சென்றுள்ளார். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தும் கூட துரத்தி உள்ளார்.

காப்பாற்றிய சிறுமி
பைக்கில் பையோடு இருந்த திருடனை பிடித்து இழுத்து, அவன் வைத்திருந்த பையை பிடுங்கி பாதுகாத்துள்ளார். மொத்தமாக திருடர்கள் எடுத்து செல்ல முயன்ற முக்கால்வாசி பொருட்களை அந்த சிறுமி காப்பாற்றியுள்ளார். இவருக்கு மூக்கில் மட்டும் சிறிய முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications