பூமியை மோதப்போகும் சீன விண்வெளி நிலையம்... அடுத்த மாதத்தில் பூமிக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!
சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது எப்போது வேண்டுமானாலும் மோதலாம் என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது
பெய்ஜிங்: சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது எப்போது வேண்டுமானாலும் மோதலாம் என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிக்காக கட்டப்பட்ட இந்த ராட்சச விண்வெளி நிலையமானது தற்போது பூமியின் மீது விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியாததால், அது எப்போது வேண்டுமானாலும் பூமியை தாக்கும் என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி துறை கூறகிறது.

டியாங்கோங்-1 ஆராய்ச்சி நிலையம்
கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி துறை விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை காட்டும் பணியில் இறங்கியது. உலகில் மிக முக்கியமான நாடுகள் மட்டுமே விண்வெளியில் ஆராய்ச்சி நிலையங்கள் கட்டியுள்ளது. அந்த வகையில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரிய அளவில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை கட்ட முடிவு எடுத்தது. இதையடுத்து 2011 இறுதியில் அந்நாட்டு விண்வெளித் துறை தனது டியாங்கோங்-1 என்ற முதல் கட்ட ராட்சச ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. இது அந்த நாட்டின் நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பயன்படும் என்று கூறப்பட்டது.

டியாங்கோங்-1 கட்டுப்பாட்டை இழந்தது
இந்த நிலையில் அந்த டியாங்கோங்-1 ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுவதற்காக சீனா நிறைய விண்வெளி வீரர்களை அனுப்பியது. சீனாவின் முதல் பெண் விண்வெளி வீரரான லியூ யாங் என்ற பெண்மணியும் இந்தக் குழுவில் சென்றார். அங்கு அந்தக் குழு வேலை பார்த்த போது எதிர்பாராத வகையில் அவர்கள் செய்த தவறால் அந்த ஆராய்ச்சி நிலையம் மொத்தமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. எவ்வளவு முயன்றும் அதை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியவில்லை.

டியாங்கோங்-1 பூமியின் மீது மோதும்
இந்த நிலையில் தற்போது அந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்த இந்த ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த ஆராய்ச்சி நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் பூமியை மோதும் எனவும் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி துறை தெரிவிக்கிறது.

தற்போது டியாங்கோங்-1 எங்கு இருக்கிறது
தற்போது இந்த விண்கலம் பூமியில் இருந்து மிகவும் தூரமான இடத்தில் இருப்பதாகவும், அது பூமியை நோக்கி 27000 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதத்தில் அது எப்படியும் பூமியை வந்தடையும் என்று கூறுகின்றார். இது பூமியை நெருங்கும் போது பல பாகங்கள் எரிந்து அழிந்து போய் இருக்கும். ஆனாலும் சில பாகங்கள் பூமியில் மிகவும் மோசமாக தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி துறை கூறுகிறது.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications