நீச்சலடிக்க போனப்போ.. இளைஞருக்கு ஏற்பட்ட அதிரிபுதிரி அனுபவம்.. ஊரே இதைத்தான் பேசுதாம்!
ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 நாட்களாக இளைஞர் ஒருவர் நரக வேதனையை அனுபவித்த சுவாரஸ்ய மற்றும் திகில் கலந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தை சேர்ந்தவர் ஜனே வெட்டிங். இவர்தான் அந்த திகில் சம்பவத்தை அனுபவித்தவர். இவர் கடந்த 7ஆம்தேதி அன்று ஒரு நீச்சல் குளத்திற்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக குளித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். நண்பர்களுடனான தனது அனுபவத்தை வீட்டிலிருந்தவர்களுடன் பகிர்ந்துள்ளார். அப்போது அவரது காதில் ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. பட்ஸ் போட்டு காதை குடைந்துள்ளார்.

சுத்தம்
பின்னர் காட்டன் துணியின் முனையை கொண்டும் சுத்தம் செய்துள்ளார். இவையெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான் பலனளித்தது. அவர் செய்வதறியாது திகைத்தார். ஆழ்ந்து தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களில் அந்த சப்தம் கேட்டு கொண்டே இருந்ததால் அவரால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. வாஸ்தவம்தானேங்க! நம்மில் பலரும் இவர் அனுபவித்த நரக வேதனையை அனுபவித்திருப்போம்.

பற்களில் பிரச்சினை
என்ன ஒரு வித்தியாசம்! நமக்கு இப்படி நடந்திருந்தால் எதையாவது செய்து அந்த சப்தத்தை சரி செய்திருப்போம். பொதுவாக பற்களில் ஏதாவது சிக்கிக் கொண்டாலும் சரி காதுகளில் ஏதேனும் சப்தம் கேட்டாலும் சரி நம்மால் நிம்மதியாகவே இருக்க முடியாது. பற்களில் மாட்டிய உணவு பொருளை எடுக்க நாம் மறந்தாலும் நமது நாக்கு ஆட்டோமேட்டிக்காக துழவி துழவி அந்த துகளை எடுக்க பார்க்கும்.

ஆன்டிபயோடிக்
அது மாதிரிதான் காதும். காதுகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒரு வினாடி கூட அதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதே போல்தான் ஜனே வெட்டிங்கும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அடுத்த நாள் 8 ஆம் தேதி ஒரு மருத்துவரிடம் சென்றார். அந்த மருத்துவரிடம் தான் நீச்சல் குளத்தில் குளித்த கதையை ஜனே கூறியுள்ளார். இதையடுத்து அவரது காதில் ஹேர் டிரையர் மூலம் அந்த ஈரத்தை எடுத்துவிட்டதாக மருத்துவர் கூறியதுடன் ஒரு ஆன்டிபயோடிக்கையும் கொடுத்தார்.

நிம்மதியாக வீடு திரும்பிய ஜனே
அப்பாடா பிரச்சினை ஓய்ந்தது என நிம்மதியாக வீடு திரும்பினார் ஜனே. அன்று இரவு உணவுக்கு பிறகு மருந்தை சாப்பிட்டார். அதற்கு மறுநாளும் மருந்தை சாப்பிட்டார். ஆனாலும் அவருக்கு பிரச்சினை தீரவில்லை. ஏதோ காதில் ஓடுவது போல் உணர்ந்து கொண்டே இருந்துள்ளார். என்னடா இது வம்பா போச்சேனு நினைத்து கொண்டு மீண்டும் வேறொரு மருத்துவரிடம் ஜனே சென்றார்.

ஐய்யோ கரப்பான்பூச்சி
அப்போது காதை பரிசோதித்த மருத்துவர், இரு விஷயங்களை ஜனேவிடம் கூறினார். ஒன்று காதில் ஏதேனும் கட்டி வளரலாம். இல்லாவிட்டால் ஏதேனும் பூச்சி நுழைந்திருககலாம் என்றார். இதை கேட்ட ஜனேவுக்கு தூக்கி வாரி போட்டது. பின்னர் மருத்துவர் அவரது காதில் மெல்லிய கருவியை விட்டு சோதனை செய்த போது அவரால் நம்பவே முடியவில்லை.

மருத்துவர்
காரணம் அவரது காதில் ஏதோ ஒரு பூச்சி உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவர் நேக்காக வெளியே எடுத்தார். எடுத்த வேகத்தில் அந்த பூச்சி இறந்துவிட்டது. பின்னர் ஜனேவிடம் மருத்துவர் அந்த பூச்சியை காண்பித்தார். கடைசியில் அது கரப்பான்பூச்சி!, தம்மாத்துண்டு கரப்பான்பூச்சி ஜனேவை 3 நாட்களாக புரட்டி போட்டது. இதை ஜனே மகிழ்ச்சியாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கரப்பான்பூச்சி பிரச்சினை
இதுகுறித்து ஜனே கூறுகையில், நான் இதுவரை இந்த சம்பவத்தை பார்த்ததில்லை. படித்திருக்கிறேன். இப்படி கூட நடக்குமா என நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த அனுபவம் கடைசியில் எனக்கே வந்துவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எப்போதும் இது போல் காதுகளில் பிரச்சினை என்றால் ஒருவருக்கு இரு மருத்துவர்களை அணுகுவதில் தவறில்லை. இந்த கரப்பான்பூச்சியால் எனக்கு 3 நாட்களாக காதே கேட்கவில்லை. தற்போது நான் நலமாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications