இடிபாடுகளை தூக்கி பார்த்தால் ஆச்சர்யம்! குட்டி சிறுமியின் செயலால் வியந்த துருக்கி.. ரியல் ஹீரோ! ப்பா

பெரிய மனுஷி போல செயல்பட்டு, தனது உயிருக்கு அஞ்சாமல் அந்த சிறுமி தனது தம்பியை பொறுப்பாக காப்பாற்றி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

அன்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. துருக்கியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்து உள்ளது. இது அதிகாரபூர்வமான பலி எண்ணிக்கை மட்டும்தான். உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சிரியாவில் 5700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக காயம் அடைந்து உள்ளனர்.

துருக்கி

துருக்கி

துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். இங்கே 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதற்கு இணையான பாதிப்பு இந்த முறை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சுவர்

சுவர்

இந்த மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கட்டிட இடிபாடுகள் ஒன்றை மீட்பு படையினர் அகற்றி வந்துள்ளனர். 10 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றில் சிக்கி பலியான நபர்களின் உடல்களை போலீசார் ஒன்று ஒன்றாக அகற்றி வந்துள்ளனர். அப்போது கட்டிடம் ஒன்றிற்கு கீழ் சிறுமி ஒருவர் சிக்கியபடி இருந்துள்ளார். அவருக்கு மேலே பெரிய சுவர் ஒன்று விழுந்த நிலையில் இருந்துள்ளது. அருகிலேயே அந்த சிறுமியின் தம்பியும் இருந்துள்ளார். இருவர் மீதும் அந்த சுவர் விழுந்தபடி கிடந்து இருக்கிறது.

சிறுமி

சிறுமி

அந்த சிறுமியை அதிகாரிகள் பார்த்தபோது அவர் தனது தம்பியின் தலையின் மேல் கை வைத்தபடி பாதுகாப்பாக இருந்துள்ளார். தனது தம்பியின் தலையில் எதுவும் விழுந்துவிடாதபடி பாதுகாப்பாக இருந்துள்ளார். தன்னுடைய உயிர் போனாலும் கூட பரவாயில்லை என்று அந்த சிறுமி தனது தம்பிக்கு கேடயமாக இருந்துள்ளார். மொத்தம் 17 மணி நேரம் அந்த சிறுமி தனது தம்பிக்கு இப்படி பாதுகாப்பு அரணாக இருந்துள்ளார். மீட்பு பணியினர் அவர்களை மீட்க வந்த போது.. அந்த சிறுமி அவர்களை சிரித்தபடி வரவேற்று உள்ளார்.

துணிச்சல்

துணிச்சல்

அந்த சிறுமிக்கு அதிகபட்சம் 5 வயதுதான் இருக்கும். அவரின் தம்பிக்கு 3-4 வயது இருக்கும். இருந்தாலும் பெரிய மனுஷி போல செயல்பட்டு, தனது உயிருக்கு அஞ்சாமல் அந்த சிறுமி தனது தம்பியை பொறுப்பாக காப்பாற்றி உள்ளார். அந்த சிறுமியை தற்போது துருக்கி ரியல் ஹீரோ என்று கூறி கொண்டாடி வருகிறது. அந்த சிறுமி அவரின் தம்பி இருவரும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐநாவில் பணியாற்றும் மீட்பு படையினர் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து, இது போன்ற பாசிட்டிவ் விஷயங்களையும் பகிருங்கள். இது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என்று தெரிவித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+