குழந்தைகளை வைத்து தீவிரவாத இயக்கத்தை உருவாக்க முயன்ற நபர்.. லண்டனை அதிர வைக்கும் திட்டம்!
லண்டனை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை வைத்து ஒரு புதிய தீவிரவாத இயக்கத்தை உருவாக்க முயன்றுள்ளார்கள்.
Recommended Video

லண்டன்: லண்டனை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை வைத்து ஒரு புதிய தீவிரவாத இயக்கத்தை உருவாக்க முயன்றுள்ளார்கள். உமர் அகமது ஹாஹ் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளி ஆவார்.
அபுதாஹர் மாமுன், முகமது அபித் ஆகியோர் இவனுக்கு உதவியாக இருந்துள்ளார்கள். இவர்கள் மாதராசா பள்ளி ஒன்றில் பொய்யான பெயரில் வேலை பார்த்துள்ளார்கள்.
அங்கு படிக்கும் மாணவர்களிடம் இவர்கள் தீவிரவாதம் குறித்து பயிற்சி கொடுத்துள்ளார்கள். தற்போது இவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.

பெரிய திட்டம்
இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் மோசமாக திட்டங்கள் தீட்டியுள்ளார்கள். குழந்தைகளை வைத்து குற்றங்களை செய்தால் மாட்டாமல் செய்யலாம் என்று இவர்கள் நம்பி இருக்கிறார்கள். எந்த தீவிரவாத இயக்கத்தின் உதவியும் இல்லாத பெரிய இயக்கமாக இதை மாற்ற முயன்றுள்ளார்கள்.

எப்படி செய்வார்கள்
குழந்தைகளுக்கு கத்தியில் எப்படி குத்துவது, மனித வெடிகுண்டாக எப்படி மாறுவது, கொலை எப்படி செய்வது என்றெல்லாம் கற்றுக் கொடுத்துள்ளார்கள். பொது இடங்களில் எப்படி பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்துவது என்றும் சொல்லி கொடுத்துள்ளார்கள். இதற்கான ஆதாரங்கள் போலீசிடம் கிடைத்துள்ளது.

வீடியோ போட்டு காட்டினார்
இதற்காக அமெரிக்கா, லண்டனில் நடந்து துப்பாக்கி சூடு வீடியோ, 9/11 தாக்குதல் வீடியோ, மும்பை தாக்குதல் வீடியோ என பல வீடியோக்களை அவர்கள் ஒளிபரப்பி இருக்கிறார்கள். தீவிரவாதிகளின் செயல்பாடு எப்படி என்று வீடியோ மூலம் விளக்கி இருக்கிறார்கள்.

எத்தனை பேர்
மொத்தமாக 56 குழந்தைகள் வரை அவர்களிடம் படித்து இருக்கிறார்கள். பலர் 15 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் பலருக்கு இவர்கள் மூவரும் என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்பதே தெரியாது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications