இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா வைரஸ்.. உள்நாட்டு அவசரநிலை கொண்டு வர முடிவு?!

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கொரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் பரவும் பி.1.1.529 வகை கொரோனா காரணமாக கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

முதலில் பிரிட்டோரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள், ஸ்வானே மெட்ரோ நகரம் ஆகியபகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன்பின் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.

புதிய வகை வைரஸ்

புதிய வகை வைரஸ்

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும், உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிகமான உருமாற்றத்தை அடைகிறதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, ஹாங்காங் சென்ற பயணிகள் உடலில் இந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிலும் பாதிப்பு

இஸ்ரேலிலும் பாதிப்பு

புதிய வகை வைரஸ் தாக்கத்தால் பல நாடுகள் மீண்டும் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வர தடை, கட்டுப்பாடுகள் என விதித்து வருகின்றனர். பல நாடுகளில் புதிய வகை வைரஸின் தாக்கம் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இஸ்ரேலிலும் பரவியுள்ளது.

 3 பேர் பாதிப்பு

3 பேர் பாதிப்பு


சமீபத்தில் ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து இஸ்ரேல் வந்த பயணி ஒருவரிடம் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேறு இருவருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. மூவருமே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மூவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Recommended Video

    உலக நாடுகளை அச்சுறுத்தும் உருமாறிய Coronavirus.. Ind vs SA series நடக்குமா?
     தடுப்பூசி

    தடுப்பூசி

    உலகிலேயே இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் அங்கு தற்போது மூன்று பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வரைஸ் பரவியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+