8, 10 வயசு குழந்தைகளை இரக்கமின்றி விறகு கட்டையால் அடித்து கொன்ற சித்தப்பா.. சைக்கோவா என விசாரணை!
குண்டூர்: ஆந்திரா மாநிலத்தில் வீட்டில் விளையாடி வந்த இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்துக்கொன்ற கொடூர சைக்கோவின் அதிர்ச்சி செயல் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சாப்ரோல் மண்டலம், வேஜண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோடேஸ்வர ராவ். இவர், ரெபெல்லே கிராமத்தை சேர்ந்த உமாதேவியை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வேலை செய்து அங்கேயே வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு பார்த்திவ் சஹஸ்வத் (10), ரோஹித் தஷ்வின் (8) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கோடேஸ்வர ராவ் தனது சொந்த ஊரான வேஜண்ட்லா கிராமத்திற்கு வந்துள்ளனர்.

உமாதேவி
இந்தநிலையில் வேஜண்ட்லா கிராமத்திலிருந்து உமாதேவியின் சொந்த ஊரான ரெபெல்லா கிராமத்திற்கு சென்றுள்ளனர். கோடேஸ்வர ராவ், உமாதேவி மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட இரண்டு மகன்கள் மட்டும் வீட்டில் விளையாடி வந்துள்ளனர்.

சிகிச்சை
அண்மையில் சில தினங்களாக உமாதேவியின் தங்கை கணவர் சீனிவாச ராவ் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்து வருவதாக சொல்லப்படும் நிலையில் சீனிவாச ராவ், கோடேஸ்வர ராவின் இரண்டு மகன்களையும் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு தாழிட்டுக் கொண்டு கட்டை, விறகு உள்ளிட்டவைகளால் சைக்கோவை போல் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்துள்ளார்.

சரண்
இதையடுத்து ஒன்றும் அறிந்திடாத பிஞ்சுகள் இரண்டும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் சீனிவாச ராவ் அருகே உள்ள காவல் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார். சீனிவாச ராவ் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்கிற கோணத்தில் போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சோகம்
ஒன்றும் அறியாத சிறு குழந்தைகள் உடல் உறுப்புகளில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்களுக்குள் இருக்கும் தகராறை வைத்துக் கொண்டு இந்த கொலை நிகழ்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications